பண்புடைமை
குறட் பாக்கள் (Kuratpaakal)
பண்புடைமை என்ற நடத்தையை யாரிடத்தும் எளிதாகக்
கலந்து பழகுவதால் எய்தலாம்.
Tamil Transliteration
Enpadhaththaal Eydhal Elidhenpa Yaarmaattum
Panputaimai Ennum Vazhakku.
அன்பு கொள்ளுதலும் குடிக்கேற்ப ஒழுகுதலும் இரண்டும்
பண்பான நெறிகளாம்.
Tamil Transliteration
Anputaimai Aandra Kutippiraththal Ivvirantum
Panputaimai Ennum Vazhakku.
முகமொப்பு ஒருகுடி மக்கள் ஒப்பாகாது : நிறைந்த
குணவொப்பு ஒப்பாகும்.
Tamil Transliteration
Uruppoththal Makkaloppu Andraal Veruththakka
Panpoththal Oppadhaam Oppu.
விருப்பத்தோடு நன்மை செய்து வாழ்பவரின் எளிய
குணத்தையே உலகம் போற்றும்.
Tamil Transliteration
Nayanotu Nandri Purindha Payanutaiyaar
Panpupaa Raattum Ulaku.
நட்பிலும் இகழ்ச்சி பிடிக்காது: பண்பாளரிடம் பகைவரும்
மதிக்கும் குணங்களே இருக்கும்.
Tamil Transliteration
Nakaiyullum Innaa Thikazhchchi Pakaiyullum
Panpula Paatarivaar Maattu.
பண்புடையார் இருப்பதால் உலகம் இருக்கிறது;
இல்லாவிடின் மண்ணாகிப் போயிருக்குமே.
Tamil Transliteration
Panputaiyaarp Pattuntu Ulakam Adhuindrel
Manpukku Maaivadhu Man.
சமுதாயப் பண்பில்லாதவர் அரம் போன்ற கூரிய
அறிஞராயினும் மரம் போல்வர்.
Tamil Transliteration
Arampolum Koormaiya Renum Marampolvar
Makkatpanpu Illaa Thavar.
நட்புக் கொள்ளாமல் தீமை செய்வாரிடத்தும் பண்பொடு
பழகாமை இழிவாகும்.
Tamil Transliteration
Nanpaatraar Aaki Nayamila Seyvaarkkum
Panpaatraar Aadhal Katai.
யாரோடும் சிரித்துப் பழகத் தெரியாதவர்க்கு இப்பேருலகம்
பகற்காலத்தும் இருளாகும்
Tamil Transliteration
Nakalvallar Allaarkku Maayiru Gnaalam
Pakalumpaar Pattandru Irul.
தீயவன் பெற்ற செல்வம் நல்ல பால் தீய பாத்திரத்தால்
முரிந்தது போலாம்.
Tamil Transliteration
Panpilaan Petra Perunjelvam Nanpaal
Kalandheemai Yaaldhirin Thatru.