கொடுங்கோன்மை

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #551 #552 #553 #554 #555 #556 #557 #558 #559 #560
குறள் #551
குடிகளை வருத்தித் தீமை புரியும் வேந்தன்
கொலையாளியினும் கொடியவன்.

Tamil Transliteration
Kolaimerkon Taarir Kotidhe Alaimerkontu
Allavai Seydhozhukum Vendhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #552
கோலுடைய அரசன் குடிகளிடம் பொருள்கேட்டல்
வேலுடைய திருடன் கெஞ்சுவதை ஒக்கும்.

Tamil Transliteration
Velotu Nindraan Ituven Radhupolum
Kolotu Nindraan Iravu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #553
நாள்தோறும் ஆராய்ந்து ஆளாத அரசனது நாடு நாளும்
கெட்டுக்கொண்டே போகும்.

Tamil Transliteration
Naatorum Naati Muraiseyyaa Mannavan
Naatorum Naatu Ketum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #554
நீதிதவறி ஆராயாது செய்யும் அரசன் பொருளும் குடி - ஒரு
சேர இழப்பான்.

Tamil Transliteration
Koozhung Kutiyum Orungizhakkum Kolkotich
Choozhaadhu Seyyum Arasu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #555
கொடுமை தாங்காது குடிகள் அழுத கண்ணீர் அரசை
அடியோடு அழிக்கும் படையாகும்.

Tamil Transliteration
Allarpattu Aatraadhu Azhudhakan Neerandre
Selvaththaith Theykkum Patai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #556
மன்னனுக்கு நிலை நல்லாட்சியால் உண்டாகும்; அது
இன்றேல் அவன் அதிகாரம் நிலையாது.

Tamil Transliteration
Mannarkku Mannudhal Sengonmai Aqdhindrel
Mannaavaam Mannark Koli.

மேலதிக விளக்கங்கள்
குறள் #557
மழையின்றேல் உலகம் என்னாகும்? அரசனது அன்பின்றேல்
குடிகள் வாழுமா?

Tamil Transliteration
Thuliyinmai Gnaalaththirku Etratre Vendhan
Aliyinmai Vaazhum Uyirkku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #558
நிதியில்லா மன்னனது ஆட்சிக்கு உட்படின்
பொருளின்மையினும் உடைமை கேடுதரும்.

Tamil Transliteration
Inmaiyin Innaadhu Utaimai Muraiseyyaa
Mannavan Korkeezhp Patin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #559
மன்னவன் நீதிமுறையோடு ஆளாவிட்டால் மழை
பருவமுறையோடு பெய்யாது போம்.

Tamil Transliteration
Muraikoti Mannavan Seyyin Uraikoti
Ollaadhu Vaanam Peyal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #560
காத்தற்கு உரிய அரசன் காவாவிடின் பசு பயன்தாராது :
எத்தொழில்களும் இரா.

Tamil Transliteration
Aapayan Kundrum Arudhozhilor Noolmarappar
Kaavalan Kaavaan Enin.

மேலதிக விளக்கங்கள்
🡱