வெருவந்த செய்யாமை
குறட் பாக்கள் (Kuratpaakal)
தக்கபடி ஆய்ந்து மேலும் குற்றம் செய்யாவாறு பொருந்தத்
தண்டிப்பவனே வேந்தன்.
Tamil Transliteration
Thakkaangu Naatith Thalaichchellaa Vannaththaal
Oththaangu Oruppadhu Vendhu.
நெடுநாள் ஆக்கம் நிலைக்க விரும்புபவர் வன்மையாக ஓங்கி
மெல்ல அடிப்பாராக.
Tamil Transliteration
Katidhochchi Mella Erika Netidhaakkam
Neengaamai Ventu Pavar.
குடிகளை மிரட்டும் கொடிய வேந்தன் கட்டாயம் விரைந்து
அழிவான்.
Tamil Transliteration
Veruvandha Seydhozhukum Vengola Naayin
Oruvandham Ollaik Ketum.
அரசன் கடுமையன் என்று குடிகள் கூறின் இடஞ்சுருங்கி
விரைந்து அழிவான்.
Tamil Transliteration
Iraikatiyan Endruraikkum Innaachchol Vendhan
Uraikatuki Ollaik Ketum.
பார்க்க அருமையும் முகங்கடுமையும் உடையவன்
பெருஞ்செல்வம் பேய்காத்தது போலும்.
Tamil Transliteration
Arunjevvi Innaa Mukaththaan Perunjelvam
Peeykan Tannadhu Utaiththu.
கண்ணிலும் சொல்லிலும் கடுமையன் ஆயின் அவன்
நெடுஞ்செல்வம் நாளாகாமல் கெடும்.
Tamil Transliteration
Katunjollan Kannilan Aayin Netunjelvam
Neetindri Aange Ketum.
கடுஞ்சொல்லும் அளவுகடந்த தண்டனையும் அரசனது
படைவலியை அறுக்கும் அரம்.
Tamil Transliteration
Katumozhiyum Kaiyikandha Thantamum Vendhan
Atumuran Theykkum Aram.
அரசன் அமைச்சரைக் கலந்து செய்யாது சினங்கொண்டு
செய்யின் செல்வம் சுருங்கும்.
Tamil Transliteration
Inaththaatri Ennaadha Vendhan Sinaththaatrich
Cheerir Sirukum Thiru.
போர்க்காலத்துத் தீயகுடியைச் சிறையிடாத அரசன் கலங்கி
வெதும்பி அழிவான்.
Tamil Transliteration
Seruvandha Pozhdhir Siraiseyyaa Vendhan
Veruvandhu Veydhu Ketum.
கடும் ஆட்சி அரசியல் கல்லாதவரையே கவரும்; நாட்டுக்குப்
பாரம் அவ்வாட்சியே, பிறிதில்லை
Tamil Transliteration
Kallaarp Pinikkum Katungol Adhuvalladhu
Illai Nilakkup Porai.