இன்னா செய்யாமை

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #311 #312 #313 #314 #315 #316 #317 #318 #319 #320
குறள் #311
சிறப்புச் செல்வம் கிடைப்பினும் பிறர்க்குத் துன்பம்
செய்யாமையே தூயவர் கொள்கை.

Tamil Transliteration
Sirappeenum Selvam Perinum Pirarkku Innaa
Seyyaamai Maasatraar Kol.

மேலதிக விளக்கங்கள்
குறள் #312
கருவம் கொண்டு துன்புறுத்தினும் திரும்பத் துன்பம்
செய்யாமையே தூயவர் நோக்கம்.

Tamil Transliteration
Karuththuinnaa Seydhavak Kannum Maruththinnaa
Seyyaamai Maasatraar Kol.

மேலதிக விளக்கங்கள்
குறள் #313
வலிய வந்து பகைத்தவர்க்குங்கூடத் துன்பம் செய்யின்
துயரம் நீங்காது.

Tamil Transliteration
Seyyaamal Setraarkkum Innaadha Seydhapin
Uyyaa Vizhuman Tharum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #314
கொடுமை செய்தாரைத் தண்டிப்பது எப்படி? அவர்
வெட்கப்படும்படி நன்மை செய்வது.

Tamil Transliteration
Innaasey Thaarai Oruththal Avarnaana
Nannayanj Cheydhu Vital.

மேலதிக விளக்கங்கள்
குறள் #315
பிறர் துன்பத்தைத் தன் துன்பம் போலக் கருதாத இடத்து
அறிவினால் என்ன பயன்?

Tamil Transliteration
Arivinaan Aakuva Thunto Piridhinnoi
Thannoipol Potraak Katai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #316
தனக்குக் கொடியது எனப் பட்டதைத் தான் பிறர்க்குச் செய்ய
விரும்பலாமா?

Tamil Transliteration
Innaa Enaththaan Unarndhavai Thunnaamai
Ventum Pirankan Seyal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #317
எவ்வகையாலும் என்றும் எவர்க்கும் மனமறியக் கொடுமை
செய்யாதே.

Tamil Transliteration
Enaiththaanum Egngnaandrum Yaarkkum Manaththaanaam
Maanaasey Yaamai Thalai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #318
தன்னுயிர்க்குப் பிடிக்காது என்ற தீமையைப் பிறவுயிர்க்கு
ஏன் செய்கின்றான்

Tamil Transliteration
Thannuyirkaku Ennaamai Thaanarivaan Enkolo
Mannuyirkku Innaa Seyal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #319
காலையில் பிறர்க்குக் கொடுமை செய்யின் மாலையில்
உனக்குக் கொடுமை தானே வரும்.

Tamil Transliteration
Pirarkkinnaa Murpakal Seyyin Thamakku Innaa
Pirpakal Thaame Varum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #320
கேடுகள் கேடுசெய்தார்க்கே வந்து சேரும்; துன்பம்
வேண்டாதார் துன்பம் செய்யார்.

Tamil Transliteration
Noyellaam Noiseydhaar Melavaam Noiseyyaar
Noyinmai Ventu Pavar.

மேலதிக விளக்கங்கள்
🡱