கொல்லாமை

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #321 #322 #323 #324 #325 #326 #327 #328 #329 #330
குறள் #321
எவ்வுயிரையும் கொல்லாமையே அறமாம். கொல்லுதல்
எல்லாத் தீமையும் தரும்.

Tamil Transliteration
Aravinai Yaadhenin Kollaamai Koral
Piravinai Ellaan Tharum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #322
ஆசிரியர்கள் கூறிய அறத்துள் மேலானது பகுத்துண்டு
பல்லுயிரையும் காப்பதுவே.

Tamil Transliteration
Pakuththuntu Palluyir Ompudhal Noolor
Thokuththavatrul Ellaan Thalai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #323
நிகரற்ற அறம் கொல்லாமை; அதற்குத் துணையாகும்
வாய்மையும் நல்ல அறம்.

Tamil Transliteration
Ondraaka Nalladhu Kollaamai Matradhan
Pinsaarap Poiyaamai Nandru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #324
நன்னெறி என்பது யாது? ஒருயிரும் கொலைப் படாதபடி
எண்ணும் நெறி.

Tamil Transliteration
Nallaaru Enappatuvadhu Yaadhenin Yaadhondrum
Kollaamai Soozhum Neri.

மேலதிக விளக்கங்கள்
குறள் #325
பிறந்த உயிரைக் கொல்ல அஞ்சுபவனே பிறவிக்கு அஞ்சும்
துறவியினும் மேலானவன்.

Tamil Transliteration
Nilaianji Neeththaarul Ellaam Kolaianjik
Kollaamai Soozhvaan Thalai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #326
கொல்லா அறத்தைக் கொண்டவன் ஆயுளை உயிருண்ணும்
யமன் நெருங்க மாட்டான்

Tamil Transliteration
Kollaamai Merkon Tozhukuvaan Vaazhnaalmel
Sellaadhu Uyirunnung Kootru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #327
இன்னொருவன் உன்னுயிரை எடுக்கும் போதும் அவனது
இன்னுயிரை எடுக்காதே.

Tamil Transliteration
Thannuyir Neeppinum Seyyarka Thaanpiridhu
Innuyir Neekkum Vinai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #328
வீரர்க்குப் போரில் படை விளைவு சிறந்தது. தனிக்கொலை
விளைவு இழிந்தது.

Tamil Transliteration
Nandraakum Aakkam Peridheninum Saandrorkkuk
Kondraakum Aakkang Katai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #329
எல்லா இழிவுகளையும் ஆராய்ந்த பெரியவர் கொலைஞனை
மிக இழிந்தவனாகக் கருதுவர்.

Tamil Transliteration
Kolaivinaiya Raakiya Maakkal Pulaivinaiyar
Punmai Therivaa Rakaththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #330
நோயுடலும் தீயவாழ்வும் உடையார் யார்? ஓருயிரை
உடம்பிலிருந்து பிரித்தவர்.

Tamil Transliteration
Uyir Utampin Neekkiyaar Enpa Seyir Utampin
Sellaaththee Vaazhkkai Yavar.

மேலதிக விளக்கங்கள்
🡱