பொருள் செயல்வகை
குறட் பாக்கள் (Kuratpaakal)
மதிப்பு இல்லாதவரையும் மதிப்பு உடையராகச் செய்யும்
செல்வமே சிறந்த செல்வம்.
Tamil Transliteration
Porulal Lavaraip Porulaakach Cheyyum
Porulalladhu Illai Porul.
செல்வம் இல்லாதவரை எல்லோரும் இகழ்வர்;
உடையவரை எல்லோரும் சிறப்புச் செய்வர்.
Tamil Transliteration
Illaarai Ellaarum Elluvar Selvarai
Ellaarum Seyvar Sirappu.
செல்வம் என்னும் அழியா ஒளி எவ்விடமும் சென்று
இருளை ஓட்டும்.
Tamil Transliteration
Porulennum Poiyaa Vilakkam Irularukkum
Enniya Theyaththuch Chendru.
நெறியோடு குற்றமின்றி ஈட்டிய பொருள் அறமும் தரும்;
இன்பமும் தரும்.
Tamil Transliteration
Araneenum Inpamum Eenum Thiranarindhu
Theedhindri Vandha Porul.
அருளும் அன்பும் பொருந்தாத செல்வத்தைத் தொடாது
போகவிடுக.
Tamil Transliteration
Arulotum Anpotum Vaaraap Porulaakkam
Pullaar Purala Vital.
வரியும் சுங்கமும் பகைவரின் திறையும் அரசனுக்கு
வருவாய்ப் பொருளாம்.
Tamil Transliteration
Uruporulum Ulku Porulumdhan Onnaarth
Theruporulum Vendhan Porul.
அன்புத் தாய் பெற்ற அருட்குழந்தை செல்வத் தாதியால்
வளரும்.
Tamil Transliteration
Arulennum Anpeen Kuzhavi Porulennum
Selvach Cheviliyaal Untu.
கையிற் பொருள் வைத்துக் காரியம் செய்தல் மலையேறி
யானைப்போரைப் பார்ப்பது போலாம்.
Tamil Transliteration
Kundreri Yaanaip Por Kantatraal Thankaiththondru
Untaakach Cheyvaan Vinai.
ஈட்டுக பொருளை ; எதிரியின் இறுமாப்பை அறுக்கும் கருவி
அதுபோல் வேறில்லை .
Tamil Transliteration
Seyka Porulaich Cherunar Serukkarukkum
Eqkadhanir Kooriya Thil.
சிறந்த பொருளைத் திரளாக ஈட்டியவர்க்கு அறமும்
இன்பமும் எளிதிற் கிடைக்கும்.
Tamil Transliteration
Onporul Kaazhppa Iyatriyaarkku Enporul
Enai Irantum Orungu.