அரண்

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #741 #742 #743 #744 #745 #746 #747 #748 #749 #750
குறள் #741
போர்மேற் செல்வார்க்கும் மதில் வேண்டும்; அஞ்சித்
தற்காப்பவர்க்கும் அது வேண்டும்.

Tamil Transliteration
Aatru Pavarkkum Aranporul Anjiththar
Potru Pavarkkum Porul.

மேலதிக விளக்கங்கள்
குறள் #742
அகழியும் வெட்டவெளியும் மலையும் செறிந்த காடும்
சேர்ந்தது அரணாகும்.

Tamil Transliteration
Manineerum Mannum Malaiyum Aninizhar
Kaatum Utaiya Tharan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #743
உயரம் அகலம் உறுதி அருமை நான்கும் அமைந்ததே அரண்
என்று நூல்கூறும்.

Tamil Transliteration
Uyarvakalam Thinmai Arumaiin Naankin
Amaivaran Endruraikkum Nool.

மேலதிக விளக்கங்கள்
குறள் #744
காக்கும் அளவு சிறிதாய் இடம் பெரிதாய்ப் பகைவரின்
எழுச்சியை மழுக்குவதே அரண்.

Tamil Transliteration
Sirukaappir Peritaththa Thaaki Urupakai
Ookkam Azhippa Tharan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #745
பிடிப்பதற்கு அரியதாய் உணவு நிறைந்ததாய் உள்ளிருப்பவர்
செயலுக்கு எளியதே அரண்.

Tamil Transliteration
Kolarkaridhaaik Kontakoozhth Thaaki Akaththaar
Nilaikkelidhaam Neeradhu Aran.

மேலதிக விளக்கங்கள்
குறள் #746
எல்லாப் பொருளும், இடத்துக்குக் கொண்டுபோய் உதவும்
நல்லாளும் உடையதே அரண்.

Tamil Transliteration
Ellaap Porulum Utaiththaai Itaththudhavum
Nallaal Utaiyadhu Aran.

மேலதிக விளக்கங்கள்
குறள் #747
வளைந்தோ திமரெனத் தாக்கியோ வஞ்சித்தோ பிடிக்க
முடியாதது அரண்.

Tamil Transliteration
Mutriyum Mutraa Therindhum Araippatuththum
Patrar Kariyadhu Aran.

மேலதிக விளக்கங்கள்
குறள் #748
வலுவாகச் சூழ்ந்து வளைத்தவரையும் நிலைதளராது நின்று
வெல்வதே அரண்.

Tamil Transliteration
Mutraatri Mutri Yavaraiyum Patraatrip
Patriyaar Velvadhu Aran.

மேலதிக விளக்கங்கள்
குறள் #749
போர்முனையில் பகைவர் ஓடுமாறு போர்வினையில்
பெருமிதச் சிறப்புடையதே அரண்.

Tamil Transliteration
Munaimukaththu Maatralar Saaya Vinaimukaththu
Veereydhi Maanta Tharan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #750
அரண் எவ்வாற்றல் உடையதாக இருந்தாலும் பேராற்றல்
இல்லாதார்க்குப் பயன் இல்லை.

Tamil Transliteration
Enaimaatchith Thaakiyak Kannum Vinaimaatchi
Illaarkan Illadhu Aran.

மேலதிக விளக்கங்கள்
🡱