படர்மெலிந் திரங்கல்

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் #1161
நான் காம நோயை மறைக்க மறைக்க அது இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போலப் பெருகும்.

Tamil Transliteration
Maraippenman Yaaniqdho Noyai Iraippavarkku
Ootruneer Pola Mikum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1162
மறைக்க முடியவில்லை; நோய் செய்தாருக்கு நாணம்
விட்டு உரைக்கவும் முடியவில்லை.

Tamil Transliteration
Karaththalum Aatrenin Noyainoi Seydhaarkku
Uraiththalum Naanuth Tharum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1163
பொறுக்காத என் உடம்பினுள் காமமும் நாணமும்
உயிர்காவடியின் இருபுறமும் தொங்குகின்றன.

Tamil Transliteration
Kaamamum Naanum Uyirkaavaath Thoongumen
Nonaa Utampin Akaththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1164
காமக்கடல் மட்டும் உண்டு, அதனைக் கடக்கச் சேமத்
தெப்பந்தான் இல்லை.

Tamil Transliteration
Kaamak Katalmannum Unte Adhuneendhum
Emap Punaimannum Il.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1165
துயரத்தை உறவினர்க்குச் செய்ய வல்லவர் பகைவர்க்கு
என்னதான் செய்ய மாட்டார்?

Tamil Transliteration
Thuppin Evanaavar Mankol Thuyarvaravu
Natpinul Aatru Pavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1166
காம இன்பம் கடலாகும் ; வருத்தும்போது காமத்துன்பம்
கடலினும் பெரிதாகும்.

Tamil Transliteration
Inpam Katalmatruk Kaamam Aqdhatungaal
Thunpam Adhanir Peridhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1167
காம வெள்ளத்து நீந்திக் கரைதெரியேன்; நடுச்சாமத்தும்
தனியே விழித்துள்ளேன்.

Tamil Transliteration
Kaamak Katumpunal Neendhik Karaikaanen
Yaamaththum Yaane Ulen.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1168
எல்லா உயிரையும் துயிலச்செய்து அருளியபின் இரவிற்கு
என்னை யல்லது துணையில்லை .

Tamil Transliteration
Mannuyir Ellaam Thuyitri Aliththiraa
Ennalladhu Illai Thunai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1169
இப்போது நேரமாகி விடியும் இரவுகள் பிரிந்த தலைவரினும்
கொடுமையுடையன.

Tamil Transliteration
Kotiyaar Kotumaiyin Thaamkotiya Innaal
Netiya Kazhiyum Iraa.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1170
அவர் இடத்துக்கு என் மனம் போவதுபோல் கண்களும்
போக முடியின் கண்ணீரில் நீந்தா.

Tamil Transliteration
Ullampondru Ulvazhich Chelkirpin Vellaneer
Neendhala Mannoen Kan.

மேலதிக விளக்கங்கள்
🡱