தூது

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #681 #682 #683 #684 #685 #686 #687 #688 #689 #690
குறள் #681
அன்பும் குடிப்பிறப்பும் அரசர்கள் விரும்பும் பண்பும்
தூதுவனுக்கு உரிய தகுதிகள்.

Tamil Transliteration
Anputaimai Aandra Kutippiraththal Vendhavaam
Panputaimai Thoodhuraippaan Panpu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #682
அன்பு அறிவு தெளிந்த பேச்சுவன்மை மூன்றும்
தூதுவனுக்கு இன்றியமையாதவை.

Tamil Transliteration
Anparivu Aaraaindha Solvanmai Thoodhuraippaarkku
Indri Yamaiyaadha Moondru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #683
பகைவர்முன் வெற்றித் தூது சொல்பவன் கற்றவருள்
கற்றவனாக விளங்க வேண்டும்.

Tamil Transliteration
Noolaarul Noolvallan Aakudhal Velaarul
Vendri Vinaiyuraippaan Panpu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #684
அறிவு தோற்றம் தெளிந்த கல்வி இவற்றில் நிறைந்தவன்
தூது செல்வானாக.

Tamil Transliteration
Arivuru Vaaraaindha Kalviim Moondran
Serivutaiyaan Selka Vinaikku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #685
விடாது சொல்லி விடுவனவற்றை விட்டுச் சிரிக்கப் பேசி
நலம் செய்பவனே தூதன்.

Tamil Transliteration
Thokach Chollith Thoovaadha Neekki Nakachcholli
Nandri Payappadhaan Thoodhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #686
கற்று அஞ்சாது எடுத்துச் சொல்லிச் சமயத்துக்கு ஏற்றது
அறிந்தவனே தூதன்.

Tamil Transliteration
Katrukkan Anjaan Selachchollik Kaalaththaal
Thakkadhu Arivadhaam Thoodhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #687
கடமை காலம் இடம் இவற்றைப் பார்த்துச் சிந்தித்து
உரைப்பவனே சிறந்த தூதன்.

Tamil Transliteration
Katanarindhu Kaalang Karudhi Itanarindhu
Enni Uraippaan Thalai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #688
தூய்மை துணை துணிவு இம் மூன்றும் நன்கு வாய்த்தல்
தூதுவன் தகுதியாம்

Tamil Transliteration
Thooimai Thunaimai Thunivutaimai Immoondrin
Vaaimai Vazhiyuraippaan Panpu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #689
பழிச் செய்தியை வாய்விடா உறுதியாளனே பகைவர்முன்
சென்று செய்தி கூறத் தக்கவன்.

Tamil Transliteration
Vitumaatram Vendharkku Uraippaan Vatumaatram
Vaaiseraa Vanka Navan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #690
தனக்குச் சாவு வரினும் தன் அரசனுக்குக் குறையாத நலம்
செய்பவனே தூதன்.

Tamil Transliteration
Irudhi Payappinum Enjaadhu Iraivarku
Urudhi Payappadhaam Thoodhu.

மேலதிக விளக்கங்கள்
🡱