குறிப்பறிதல்

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #701 #702 #703 #704 #705 #706 #707 #708 #709 #710
குறள் #701
கூறாமலே முகம்பார்த்துக் குறிப்பு அறிபவன் உலகத்துக்கு
என்றும் ஓர் அணியாவான்

Tamil Transliteration
701 Kooraamai Nokkake Kuripparivaan Egngnaandrum
Maaraaneer Vaiyak Kani.

மேலதிக விளக்கங்கள்
குறள் #702
தெளிவாக உள்ளோட்டத்தை உணர்பவனைத் தெய்வத்துக்கு
நிகராக மதிக்க.

Tamil Transliteration
Aiyap Pataaadhu Akaththadhu Unarvaanaith
Theyvaththo Toppak Kolal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #703
முகச்சாடையினால் உள்ளத்தை உணர்பவரை எது
கொடுத்தும் அவையில் அமர்த்திக்கொள்க

Tamil Transliteration
Kurippir Kurippunar Vaarai Uruppinul
Yaadhu Kotuththum Kolal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #704
குறிப்பைக் கூறாமலே அறிய வல்லவர்க்கும்
அறியாதவர்க்கும் உடம்பளவில் ஒற்றுமை.

Tamil Transliteration
Kuriththadhu Kooraamaik Kolvaaro Tenai
Uruppo Ranaiyaraal Veru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #705
முகங்கண்டு உள்ளம் காணவில்லை யாயின் கண் என்ற
உறுப்பின் பயன் என்ன?

Tamil Transliteration
Kurippir Kurippunaraa Vaayin Uruppinul
Enna Payaththavo Kan?.

மேலதிக விளக்கங்கள்
குறள் #706
முன்னுள்ள பொருளைக் கண்ணாடி காட்டும்; உள் மிக்க
உணர்ச்சியை முகம் காட்டும்.

Tamil Transliteration
Atuththadhu Kaattum Palingupol Nenjam
Katuththadhu Kaattum Mukam.

மேலதிக விளக்கங்கள்
குறள் #707
மகிழ்வையும் வெறுப்பையும் முகம் முந்திக்காட்டும்; முகம்
போல் அறியுந்திறம் பிறிதிற்கு இல்லை

Tamil Transliteration
Mukaththin Mudhukkuraindhadhu Unto Uvappinum
Kaayinum Thaanmun Thurum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #708
நிகழ்வதை உள்ளத்தால் உணர்வார்க்கு முன்னே முகம்
பார்த்து நின்றால் போதுமே.

Tamil Transliteration
Mukamnokki Nirka Amaiyum Akamnokki
Utra Thunarvaarp Perin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #709
பகையா நட்பா என்பதைக் கண் சொல்லும்; கண்ணின் கூறு
தெரிந்தவர்கட்கு.

Tamil Transliteration
Pakaimaiyum Kenmaiyum Kannuraikkum Kannin
Vakaimai Unarvaarp Perin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #710
கூரிய அறிவுடையோம் என்பவர்க்கு அளவுகோலாவது
பிறர்கண்ணே ; வேறில்லை .

Tamil Transliteration
Nunniyam Enpaar Alakkungol Kaanungaal
Kannalladhu Illai Pira.

மேலதிக விளக்கங்கள்
🡱