பொறையுடைமை

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #151 #152 #153 #154 #155 #156 #157 #158 #159 #160
குறள் #151
குழிபறிப்பாரையும் நிலம் சுமப்பது போல் நம்மை
இகழ்வாரையும் பொறுப்பதே சிறப்பு.

Tamil Transliteration
Akazhvaaraith Thaangum Nilampolath Thammai
Ikazhvaarp Poruththal Thalai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #152
பிறரது பெருங்குற்றத்தை என்றும் பொறுக்க ; முடியுமாயின்
மறக்க ; அது மிக நல்லது.

Tamil Transliteration
Poruththal Irappinai Endrum Adhanai
Maraththal Adhaninum Nandru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #153
பெரியவறுமை வந்த விருந்தை நீக்குவது: பெரியவலிமை
பேதையைப் பொறுப்பது.

Tamil Transliteration
Inmaiyul Inmai Virundhoraal Vanmaiyul
Vanmai Matavaarp Porai.

மேலதிக விளக்கங்கள்
குறள் #154
பெருந்தன்மை நீங்காதிருக்க வேண்டின் பொறுக்குந்
தன்மைபைப் போற்றிக் கொள்க.

Tamil Transliteration
Niraiyutaimai Neengaamai Ventin Poraiyutaimai
Potri Yozhukap Patum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #155
தண்டித்தவரை யார் மதிப்பா? பொறுத்தவரையே
பொன்போல் போற்றி மதிப்பர்.

Tamil Transliteration
Oruththaarai Ondraaka Vaiyaare Vaippar
Poruththaaraip Ponpor Podhindhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #156
தண்டித்தவர்க்கு அப்போதைய மகிழ்ச்சியே;
பொறுத்தவர்க்கோ உலகம் உள்ளளவும் புகழ்

Tamil Transliteration
Oruththaarkku Orunaalai Inpam Poruththaarkkup
Pondrun Thunaiyum Pukazh.

மேலதிக விளக்கங்கள்
குறள் #157
பிறர் முறையல்லவற்றைச் செய்தாலும் வருந்தி நீ
அறமல்லவற்றைச் செய்யாதே.

Tamil Transliteration
Thiranalla Tharpirar Seyyinum Nonondhu
Aranalla Seyyaamai Nandru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #158
தன் இறுமாப்பால் தீமை செய்தவரை நீ உன் பொறுமைச்
சிறப்பால் வென்று விடுக.

Tamil Transliteration
Mikudhiyaan Mikkavai Seydhaaraith Thaandham
Thakudhiyaan Vendru Vital.

மேலதிக விளக்கங்கள்
குறள் #159
தரங்கெட்டவரின் வசவைப் பொறுப்பவர் துறந்தவரினும்
தூயவர்.

Tamil Transliteration
Thurandhaarin Thooimai Utaiyar Irandhaarvaai
Innaachchol Norkir Pavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #160
பட்டினி கிடந்து நோன்பிருப்பவர் பெரியவர் அவரினும்
பெரியவர் வசவைப் பொறுப்பவர்.

Tamil Transliteration
Unnaadhu Norpaar Periyar Pirarsollum
Innaachchol Norpaarin Pin.

மேலதிக விளக்கங்கள்
🡱