நெஞ்சொடு புலத்தல்

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் #1291
அவர்மனம் அவர்பக்கம் இருப்பதைப் பார்த்தும் என்மனமே!
நீ என்பக்கம் இராதது ஏன்?

Tamil Transliteration
Avarnenju Avarkkaadhal Kantum Evannenje
Neeemakku Aakaa Thadhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1292
பொருந்தாதவரின் நிலை தெரிந்த பின்னும் வெறுக்கார்
என்று என் நெஞ்சே போகின்றாய்.

Tamil Transliteration
Uraaa Thavarkkanta Kannum Avaraich
Cheraaarenach Cheriyen Nenju.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1293
நெஞ்சே! உன்நோக்கப்படி அவரிடம் செல்லுதல்
கெட்டவர்க்கு நண்பரில்லை என்பது கருத்தோ?

Tamil Transliteration
Kettaarkku Nattaaril Enpadho Nenjenee
Pettaangu Avarpin Selal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1294
நெஞ்சே முதலில் பிணங்கிப் பின் கூடாய்; இனி அத்தகைய
உன்னோடு யார் ஆராய்வார்?

Tamil Transliteration
Inianna Ninnotu Soozhvaaryaar Nenje
Thuniseydhu Thuvvaaikaan Matru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1295
என் நெஞ்சம் என்றும் துன்பம் உடையது: கூடாமைக்கும்,
கூடின் பிரிவுக்கும் வருந்தும்

Tamil Transliteration
Peraaamai Anjum Perinpirivu Anjum
Araaa Itumpaiththen Nenju.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1296
தனித்திருந்து அவரை நினைத்த போது என் நெஞ்சம்
என்னைத் தின்ன உடனிருந்தது.

Tamil Transliteration
Thaniye Irundhu Ninaiththakkaal Ennaith
Thiniya Irundhadhen Nenju.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1297
அவரை மறக்கமுடியாத மடமையுடைய சிறிய
நெஞ்சின்வயப்பட்டு நாணை விட்டேன்.

Tamil Transliteration
Naanum Marandhen Avarmarak Kallaaen
Maanaa Matanenjir Pattu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1298
இகழ்தல் இழிவென்று அவர் பண்புகளையே
உயிரப்பற்றுடைய நெஞ்சு எண்ணும்.

Tamil Transliteration
Ellin Ilivaamendru Enni Avardhiram
Ullum Uyirkkaadhal Nenju.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1299
தன்னுடைய நெஞ்சமே துணையாகாத போது துன்பக்
காலத்து வேறு யார் துணையாவார்?

Tamil Transliteration
Thunpaththirku Yaare Thunaiyaavaar Thaamutaiya
Nenjan Thunaiyal Vazhi.

மேலதிக விளக்கங்கள்
குறள் #1300
தன்னுடைய நெஞ்சமே உறவாகாத போது அயலவர்
உறவாகாமை இயல்புதானே.

Tamil Transliteration
Thanjam Thamarallar Edhilaar Thaamutaiya
Nenjam Thamaral Vazhi.

மேலதிக விளக்கங்கள்
🡱