நாடு
குறட் பாக்கள் (Kuratpaakal)
குறையாத விளைச்சலும் நடுநிலைமை யாளரும் சோர்விலாத
வணிகரும் உடையது நாடு.
Tamil Transliteration
Thallaa Vilaiyulum Thakkaarum Thaazhvilaach
Chelvarum Servadhu Naatu.
பொருட் பெருக்கத்தால் விரும்பத் தக்கதும் கேடின்றி மிக
விளைவதும் நாடு.
Tamil Transliteration
Perumporulaal Pettakka Thaaki Arungettaal
Aatra Vilaivadhu Naatu.
வரும் சுமையெல்லாம் தாங்கி அரசனுக்கு வரியெல்லாம்
கொடுப்பதுவே நாடு.
Tamil Transliteration
Poraiyorungu Melvarungaal Thaangi Iraivarku
Iraiyorungu Nervadhu Naatu.
தீராப்பசியும் தீராநோயும் தீராப்பகையும் இல்லாது நடப்பதுவே
நாடு.
Tamil Transliteration
Urupasiyum Ovaap Piniyum Serupakaiyum
Seraa Thiyalvadhu Naatu.
பலகட்சி, உட்பகை, அரசினை ஆட்டும் காலிக் கூட்டம்
இல்லாததே நாடு.
Tamil Transliteration
Palkuzhuvum Paazhseyyum Utpakaiyum Vendhalaikkum
Kolkurumpum Illadhu Naatu.
கேடறியாது கெட்டாலும் வளங்குறையாது என்ற நாடே
தலையான நாடு.
Tamil Transliteration
Ketariyaak Ketta Itaththum Valangundraa
Naatenpa Naattin Thalai.
அகழியும் வாய்ப்பான மலையும் அருவியும் வன்மதிலும்
நாட்டின் உறுப்புக்கள்.
Tamil Transliteration
Irupunalum Vaaindha Malaiyum Varupunalum
Vallaranum Naattirku Uruppu.
நோயின்மை செல்வம் விளைச்சல் இன்பம் காவல் ஐந்தும்
நாட்டிற்கு அணி என்பர்.
Tamil Transliteration
Piniyinmai Selvam Vilaivinpam Emam
Aniyenpa Naattiv Vaindhu.
தன்னிறைவுடைய வளநாடே உரிமை நாடு; பிறநாட்டை
எதிர் நோக்கும் நாடு நாடன்று.
Tamil Transliteration
Naatenpa Naataa Valaththana Naatalla
Naata Valandharu Naatu.
மேலைச் சிறப்பெல்லாம் இருந்தும் பயனில்லை நல்லாட்சி
இல்லாத நாடு.
Tamil Transliteration
Aangamai Veydhiyak Kannum Payamindre
Vendhamai Villaadha Naatu.