நட்பு
குறட் பாக்கள் (Kuratpaakal)
நட்புப்போல் செய்தற்கு அரியதும் இல்லை; அதுபோல்
காரியத்துக்குத் துணையும் வேறில்லை.
Tamil Transliteration
Seyarkariya Yaavula Natpin Adhupol
Vinaikkariya Yaavula Kaappu.
நல்லவர் நட்பு வளர்பிறை போன்றது; பேதையர் நட்புத்
தேய்பிறை போன்றது.
Tamil Transliteration
Niraineera Neeravar Kenmai Piraimadhip
Pinneera Pedhaiyaar Natpu.
பழகப் பழகப் பண்புடையவர் நட்பு படிக்கப் படிக்க நூலின்பம்
போலும்.
Tamil Transliteration
Navildhorum Noolnayam Polum Payildhorum
Panputai Yaalar Thotarpu.
நட்புச் செய்தல் அரட்டை அடித்தற்கன்று: பிழை செய்யும்
போது முன்வந்து இடித்தற்காம்.
Tamil Transliteration
Nakudhar Poruttandru Nattal Mikudhikkan
Mersenaru Itiththar Poruttu.
நட்புக்குப் பலநாட் பழக்கம் வேண்டாம்; ஒத்த
மனப்பான்மையே உறவு தரும்.
Tamil Transliteration
Punarchchi Pazhakudhal Ventaa Unarchchidhaan
Natpaang Kizhamai Tharum.
முகம் இனிக்கப் பழகுவது நட்பாகாது; மனம் இனிக்கப்
பழகுவதே நட்பு .
Tamil Transliteration
Mukanaka Natpadhu Natpandru Nenjaththu
Akanaka Natpadhu Natpu.
தீமைகளை நீக்கி நல்வழிப் படுத்தித் துன்பத்தில் தொடர்பு
கொள்வதே நட்பு.
Tamil Transliteration
Azhivi Navaineekki Aaruyththu Azhivinkan
Allal Uzhappadhaam Natpu.
உடைநெகிழின் உடனே உதவும் கை போல நண்பன் துயரை
முந்திக்களைவதே நட்பு.
Tamil Transliteration
Utukkai Izhandhavan Kaipola Aange
Itukkan Kalaivadhaam Natpu.
நட்பின் உயர் நிலையாது? வேறு படாமல் முடிந்தவரை
நண்பனைத் தாங்கி நிற்றல்.
Tamil Transliteration
Natpirku Veetrirukkai Yaadhenin Kotpindri
Ollumvaai Oondrum Nilai.
இவர் இன்னார், யான் இன்னவன் என்று பிரித்துக் கூறினும்
நட்பு பெருமை இழக்கும்.
Tamil Transliteration
Inaiyar Ivaremakku Innamyaam Endru
Punaiyinum Pullennum Natpu.