நட்பாராய்தல்

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #791 #792 #793 #794 #795 #796 #797 #798 #799 #800
குறள் #791
ஆராயாது நட்பதுபோல் கேடில்லை ; ஏன்? நட்புச் செய்தபின்
என்றும் விடுதலை இல்லை.

Tamil Transliteration
Naataadhu Nattalir Ketillai Nattapin
Veetillai Natpaal Pavarkku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #792
பலமுறை ஆராய்ந்து கொள்ளாத நட்பு இறுதியில் சாகும்
துயரத்தைத் தரும்.

Tamil Transliteration
Aaindhaaindhu Kollaadhaan Kenmai Kataimurai
Thaansaam Thuyaram Tharum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #793
குணம் குடிப்பிறப்பு குற்றம் கூட்டாளி எல்லாம் அறிந்து நட்புக்
கொள்க.

Tamil Transliteration
Kunamum Kutimaiyum Kutramum Kundraa
Inanum Arindhiyaakka Natpu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #794
நற்குடியிற் பிறந்து பழிக்கு அஞ்சுபவனை எது கொடுத்தும்
நட்புக் கொள்வாயாக.

Tamil Transliteration
Kutippirandhu Thankan Pazhinaanu Vaanaik
Kotuththum Kolalventum Natpu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #795
அழும்படி சொல்லி இடித்துரைக்கும் ஆற்றல் உடையவர்
நட்பை உணர்ந்து கொள்க.

Tamil Transliteration
Azhachcholli Alladhu Itiththu Vazhakkariya
Vallaarnatapu Aaindhu Kolal.

மேலதிக விளக்கங்கள்
குறள் #796
கேடுகாலத்தும் ஒரு நன்மை உண்டு; அன்று நண்பர் யார்
என்று அளந்து கொள்ளலாம்.

Tamil Transliteration
Kettinum Untor Urudhi Kilaignarai
Neetti Alappadhor Kol.

மேலதிக விளக்கங்கள்
குறள் #797
ஒருவர்க்கு வருவாய் என்பது யாது? அறிவிலார் நட்பை
அகற்றிக் கொள்ளுதல்.

Tamil Transliteration
Oodhiyam Enpadhu Oruvarkup Pedhaiyaar
Kenmai Oreei Vital.

மேலதிக விளக்கங்கள்
குறள் #798
மனம் சுருங்கும் எண்ணங்களை எண்ணாதே; துன்பத்தில்
கைவிடுவார் நட்பைக் கொள்ளாதே.

Tamil Transliteration
Ullarka Ullam Sirukuva Kollarka
Allarkan Aatraruppaar Natpu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #799
துன்பக் காலத்துக் கைவிட்டவர் நட்பினை ஈமத்தீயில்
நினைப்பினும் நெஞ்சம் எரியும்

Tamil Transliteration
Ketungaalaik Kaivituvaar Kenmai Atungaalai
Ullinum Ullanj Chutum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #800
குற்றமிலார் நட்பைக் கொள்ளுக; எது கொடுத்தாலும்
ஒவ்வாதார் நட்பை உதறித் தள்ளுக.

Tamil Transliteration
Maruvuka Maasatraar Kenmaion Reeththum
Oruvuka Oppilaar Natpu.

மேலதிக விளக்கங்கள்
🡱