நடுவு நிலைமை

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #111 #112 #113 #114 #115 #116 #117 #118 #119 #120
குறள் #111
இடந்தோறும் முறையோடு ஒழுக முடியின் நடுவு
நிலைமை மிகச்சிறந்த அறமாம்.

Tamil Transliteration
Thakudhi Enavondru Nandre Pakudhiyaal
Paarpattu Ozhukap Perin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #112
நேர்மை உடையவனது செல்வம் குறையாமல் வழி வழி
மக்கட்குத் துணையாகும்.

Tamil Transliteration
Seppam Utaiyavan Aakkanj Chidhaivindri
Echchaththir Kemaappu Utaiththu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #113
நலமே தரினும் நேர்மையில்லா ஆக்கத்தை அப்போதே
விட்டு விடுக.

Tamil Transliteration
Nandre Tharinum Natuvikandhaam Aakkaththai
Andre Yozhiya Vital.

மேலதிக விளக்கங்கள்
குறள் #114
இவர் நேர்மையர் நேர்மையற்றவர் என்பது அவரவர்
வழியினரால் காணமுடியும்.

Tamil Transliteration
Thakkaar Thakavilar Enpadhu Avaravar
Echchaththaar Kaanap Patum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #115
அழிதலும் ஆதலும் உலகியற்கை ; ஆதலின் மனம்
சாயாமையே சான்றோர்க்கு அழகு.

Tamil Transliteration
Ketum Perukkamum Illalla Nenjaththuk
Kotaamai Saandrork Kani.

மேலதிக விளக்கங்கள்
குறள் #116
நின் நெஞ்சம் நேர்மை தவறிச் செல்லின் கேடு காலம்
என்று தெரிந்து கொள்க.

Tamil Transliteration
Ketuvalyaan Enpadhu Arikadhan Nenjam
Natuvoreei Alla Seyin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #117
நேர்மையாக நின்றமையால் தாழ்வு வரின் அதனைக்
கேடாக உலகம் கருதாது.

Tamil Transliteration
Ketuvaaka Vaiyaadhu Ulakam Natuvaaka
Nandrikkan Thangiyaan Thaazhvu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #118
சமமாக நின்று பின் நிறுக்கும் தராசு போல மனஞ்சாயா
நேர்மையே நடுவர்க்கு அழகு.

Tamil Transliteration
Samanseydhu Seerdhookkung Kolpol Amaindhorupaal
Kotaamai Saandrork Kani.

மேலதிக விளக்கங்கள்
குறள் #119
உள்ளம் சிறிதும் சாயாமல் இருந்தாலன்றோ சொல்லுகின்ற
சொல் நோமைச் சொல்லாகும்.

Tamil Transliteration
Sorkottam Illadhu Seppam Orudhalaiyaa
Utkottam Inmai Perin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #120
விலைப்பொருளையும் கொள்பொருளாக மதித்தால்
வணிகர்க்கு நல்ல வணிகம் ஏற்படும்.

Tamil Transliteration
Vaanikam Seyvaarkku Vaanikam Penip
Piravum Thamapol Seyin.

மேலதிக விளக்கங்கள்
🡱