கயமை (கீழ்மை )
குறட் பாக்கள் (Kuratpaakal)
கயவர் மக்கள் போன்றே இருப்பர்; அன்ன
வடிவொற்றுமையை யாம் கண்டதில்லை.
Tamil Transliteration
Makkale Polvar Kayavar Avaranna
Oppaari Yaanganta Thil.
மெய்யறிஞர் போலக் கயவரும் மகிழ்வுடையர்; ஏன்?
மனத்தில் எதற்கும் கவலைப் படார்.
Tamil Transliteration
Nandrari Vaarir Kayavar Thiruvutaiyar
Nenjaththu Avalam Ilar.
கயவர்கள் அரசர் போன்றவர்கள் ; ஏன்? தாம்
விரும்பியபடியே நடப்பார்கள்.
Tamil Transliteration
Thevar Anaiyar Kayavar Avarundhaam
Mevana Seydhozhuka Laan.
கயவர் தம்மினும் இழிந்தவரைக் கண்டால் அவரால்
போற்றப்பட்டு இறுமாப்பர்.
Tamil Transliteration
Akappatti Aavaaraik Kaanin Avarin
Mikappattuch Chemmaakkum Keezh.
அச்சமே கயவர்களின் இயல்பு: புகழாசை இருந்தால் சிறிது
இருக்கலாம்
Tamil Transliteration
Achchame Keezhkaladhu Aasaaram Echcham
Avaavuntel Untaam Siridhu.
கயவர் அறிவிக்கும் பறைபோல்வர்: ஏன்?
மறைச்செய்தியைப் பிறரிடம் போய்க்கூறுவர்.
Tamil Transliteration
Araiparai Annar Kayavardhaam Ketta
Maraipirarkku Uyththuraikka Laan.
பல்லை உடைக்கும் கொடுங்கையர்க்கு அன்றிக் கயவர்கள்
எச்சிற்கையும் உதறமாட்டார்கள்.
Tamil Transliteration
Eerngai Vidhiraar Kayavar Kotirutaikkum
Koonkaiyar Allaa Thavarkku.
சொன்ன அளவிலே பயன்செய்வர் மேலோர்; கரும்பு போல்
நசுக்கின் பயன்செய்வர் கீழோர்.
Tamil Transliteration
Sollap Payanpatuvar Saandror Karumpupol
Kollap Payanpatum Keezh.
உண்டு உடுத்து நடப்பதைக் கண்டாலே அவர்கள் மேல்
குற்றஞ் சுமத்துவான் கயவன்.
Tamil Transliteration
Utuppadhooum Unpadhooum Kaanin Pirarmel
Vatukkaana Vatraakum Keezh.
எதற்குத் தகுதி கயவர்? ஏதும் கிடைப்பின் விரைந்து தன்
மானத்தை விற்கத் தகுதி
Tamil Transliteration
Etrir Kuriyar Kayavarondru Utrakkaal
Vitrarku Uriyar Viraindhu.