உட்பகை

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #881 #882 #883 #884 #885 #886 #887 #888 #889 #890
குறள் #881
குளிர்ந்த நீரும் தீமை எனின் விரும்பத்தகா : உறவினர்
குணங்களும் கேடுதரின் பிடிக்கா.

Tamil Transliteration
Nizhalneerum Innaadha Innaa Thamarneerum
Innaavaam Innaa Seyin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #882
வாள் போல் கொடிய பகைக்கு அஞ்சவேண்டாம்;
உறவுபோல் நடிக்கும் உட்பகைக்கு அஞ்சுக .

Tamil Transliteration
Vaalpola Pakaivarai Anjarka Anjuka
Kelpol Pakaivar Thotarpu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #883
உட்பகையிலிருந்து தன்னைக் காத்துக்கொள்க; தளருங்கால்
மண்வெட்டி போலச் சாய்ந்துவிடும்.

Tamil Transliteration
Utpakai Anjiththar Kaakka Ulaivitaththu
Matpakaiyin Maanath Therum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #884
உள்ளம் ஒட்டாத உட்பகை இருந்தால் சுற்றம் ஒட்டாதபடி
பல துன்பம் தரும்.

Tamil Transliteration
Manamaanaa Utpakai Thondrin Inamaanaa
Edham Palavum Tharum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #885
உறவு முறையில் பகை உண்டாகின் சாகும்படியான பல
துன்பம் தரும்.

Tamil Transliteration
Uralmuraiyaan Utpakai Thondrin Iralmuraiyaan
Edham Palavum Tharum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #886
கூட இருப்பவர்பால் கூடாமை ஏற்படின் ஒருநாளும்
அழிவிலிருந்து தப்ப முடியாது.

Tamil Transliteration
Ondraamai Ondriyaar Katpatin Egngnaandrum
Pondraamai Ondral Aridhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #887
தவலையும் மூடியும் போலச் சேர்ந்திருந்தாலும் உட்பகை உள்ள
குடியினர் மனம் ஒன்றுபடார்.

Tamil Transliteration
Seppin Punarchchipol Kootinum Kootaadhe
Utpakai Utra Kuti.

மேலதிக விளக்கங்கள்
குறள் #888
உட்பகை உள்ள குடி மெல்ல வலிகுறைந்து அரம் அராவிய
இரும்பு போல் தேயும்.

Tamil Transliteration
Aramporudha Ponpolath Theyum Uramporudhu
Utpakai Utra Kuti.

மேலதிக விளக்கங்கள்
குறள் #889
எள்ளின் பிளவுபோலச் சிறிதாக இருந்தாலும் உட்பகையால்
கேடு உண்டு.

Tamil Transliteration
Etpaka Vanna Sirumaiththe Aayinum
Utpakai Ulladhaang Ketu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #890
மனவொற்றுமை இல்லாதவரோடு வாழ்தல் பெட்டியில்
பாம்புடன் வாழ்வதைப் போலும்.

Tamil Transliteration
Utampaatu Ilaadhavar Vaazhkkai Kutangarul
Paampotu Utanurain Thatru.

மேலதிக விளக்கங்கள்
🡱