வெஃகாமை

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #171 #172 #173 #174 #175 #176 #177 #178 #179 #180
குறள் #171
நேர்மை யின்றிப் பிறர்பொருளைக் கவர்ந்தால் உடனே
குடியழிந்து குற்றங்கள் பெருகும்.

Tamil Transliteration
Natuvindri Nanporul Veqkin Kutipondrik
Kutramum Aange Tharum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #172
கொள்ளை விரும்பிக் கூடாதன செய்யார் நேர்மைக்கு
அஞ்சும் பெரியவர்.

Tamil Transliteration
Patupayan Veqkip Pazhippatuva Seyyaar
Natuvanmai Naanu Pavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #173
சிறுநலத்தை விரும்பிக் கொடியவை செய்யார்
பெருநலத்தை நாடுபவர்.

Tamil Transliteration
Sitrinpam Veqki Aranalla Seyyaare
Matrinpam Ventu Pavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #174
ஆசைகளை அடக்கிய உயர்ந்த அறிஞர் இல்லை
என்பதற்காகப் பிறர் பொருளை நாடார்.

Tamil Transliteration
Ilamendru Veqkudhal Seyyaar Pulamvendra
Punmaiyil Kaatchi Yavar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #175
எவர்பொருளையும் நச்சிக் கொடுமை செய்தால் , நுணுகிப்
பரந்த அறிவால் பயன் என்ன?

Tamil Transliteration
Aqki Akandra Arivennaam Yaarmaattum
Veqki Veriya Seyin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #176
அருளை நாடி உரியவழியில் நிற்பவன் பிறர் பொருளைக்
கவர நினைப்பின் கெடுவான்.

Tamil Transliteration
Arulveqki Aatrinkan Nindraan Porulveqkip
Pollaadha Soozhak Ketum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #177
பிறர்பொருளால் வரும் விளைவு மிகப் பொல்லாது; ஆதலின்
தீய முன்னேற்றத்தை வேண்டாதே.

Tamil Transliteration
Ventarka Veqkiyaam Aakkam Vilaivayin
Maantar Karidhaam Payan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #178
தன் செல்வம் குறையாமைக்கு வழி யாது? பிறன்
செல்வத்தைப் பறிக்க விரும்பாமை.

Tamil Transliteration
Aqkaamai Selvaththirku Yaadhenin Veqkaamai
Ventum Pirankaip Porul.

மேலதிக விளக்கங்கள்
குறள் #179
முறையறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிஞரைத்
தெரிந்து திருமகள் அடைவாள்.

Tamil Transliteration
Aranarindhu Veqkaa Arivutaiyaarch Cherum
Thiranarin Thaange Thiru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #180
பின் வருவது பாராமல் விரும்புவது அழிவு: வேண்டாம்
என்னும் பெருமிதம் வெற்றி.

Tamil Transliteration
Iraleenum Ennaadhu Veqkin Viraleenum
Ventaamai Ennunj Cherukku.

மேலதிக விளக்கங்கள்
🡱