விருந்தோம்பல்

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #81 #82 #83 #84 #85 #86 #87 #88 #89 #90
குறள் #81
குடும்பமாக இருந்து சிறந்து வாழ்வதெல்லாம் விருந்து பேணி
உதவி செய்தற்கே.

Tamil Transliteration
Irundhompi Ilvaazhva Thellaam Virundhompi
Velaanmai Seydhar Poruttu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #82
வந்த விருந்து வெளிப்புறம் இருக்க, தனக்குச் சாவாமருந்து
கிடைப்பினும் உண்ணல் ஆகாது.

Tamil Transliteration
Virundhu Puraththadhaath Thaanuntal Saavaa
Marundheninum Ventarpaar Randru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #83
நாளும் வருகின்ற விருந்தைப் போற்றுக வாழ்வு துன்பப்பட்டு
அழியாது.

Tamil Transliteration
Varuvirundhu Vaikalum Ompuvaan Vaazhkkai
Paruvandhu Paazhpatudhal Indru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #84
முகம் மலர்ந்து விருந்து செய்பவன் வீட்டில் அகம் மலர்ந்து
திருமகள் தங்கிவிடுவாள்.

Tamil Transliteration
Akanamarndhu Seyyaal Uraiyum Mukanamarndhu
Nalvirundhu Ompuvaan Il.

மேலதிக விளக்கங்கள்
குறள் #85
விருந்து செய்தபின் மிச்சத்தை உண்பவனது நிலத்துக்கு
விதைகூட இடவேண்டுமா?

Tamil Transliteration
Viththum Italventum Kollo Virundhompi
Michchil Misaivaan Pulam.

மேலதிக விளக்கங்கள்
குறள் #86
வந்தாரைப் போற்றி வருவாரை ஏற்பவன் தேவர்க்கு நல்விருந்து
ஆவான்.

Tamil Transliteration
Selvirundhu Ompi Varuvirundhu Paarththiruppaan
Nalvarundhu Vaanath Thavarkku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #87
விருந்தின் பயன் இதுவென்று அளக்க முடியாது: விருந்தினர்
பெருமையே விருந்தின் பெருமை.

Tamil Transliteration
Inaiththunaith Thenpadhon Rillai Virundhin
Thunaiththunai Velvip Payan.

மேலதிக விளக்கங்கள்
குறள் #88
விருந்து என்னும் வேள்வியில் ஈடுபடாதவர் காத்த பொருளையும்
இழந்து பின் வருந்துவர்.

Tamil Transliteration
Parindhompip Patratrem Enpar Virundhompi
Velvi Thalaippataa Thaar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #89
செல்வத்தில் வறுமை விருந்திடா மடமையாம்; இக்குணம்
முழுதும் அறிவிலியிடமே இருக்கும்.

Tamil Transliteration
Utaimaiyul Inmai Virundhompal Ompaa
Matamai Matavaarkan Untu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #90
அனிச்சப்பூ மோந்தால் வாடும்; விருந்தோ முகமாறிப் பார்த்தாலே
வாடிப் போம்.

Tamil Transliteration
Moppak Kuzhaiyum Anichcham Mukandhirindhu
Nokkak Kuzhaiyum Virundhu.

மேலதிக விளக்கங்கள்
🡱