புல்லறிவாண்மை

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #841 #842 #843 #844 #845 #846 #847 #848 #849 #850
குறள் #841
அறிவு வறுமையே வறுமை; பிறவற்றை வறுமையாக உலகம்
கருதாது.

Tamil Transliteration
Arivinmai Inmaiyul Inmai Piridhinmai
Inmaiyaa Vaiyaa Thulaku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #842
அறிவிலான் மனம் உவந்து ஈவானாயின் கொள்பவன்
நல்வினையே காரணம்.

Tamil Transliteration
Arivilaan Nenjuvandhu Eedhal Piridhiyaadhum
Illai Peruvaan Thavam.

மேலதிக விளக்கங்கள்
குறள் #843
அறிவிலி தானே தேடிக்கொள்ளும் துயரைப் பகைவரும்
அவனுக்குச் செய்ய இயலாது.

Tamil Transliteration
Arivilaar Thaandhammaip Peezhikkum Peezhai
Seruvaarkkum Seydhal Aridhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #844
அறிவின்மை என்பது யாது? எனக்கு எல்லாம் தெரியும்
என்னும் இறுமாப்பு

Tamil Transliteration
Venmai Enappatuva Thiyaadhenin Onmai
Utaiyamyaam Ennum Serukku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #845
படியாதவற்றை மேற்கொண்டு நடப்பின் நன்கு படித்ததிலும்
உலகம் ஐயம் கொள்ளும்.

Tamil Transliteration
Kallaadha Merkon Tozhukal Kasatara
Valladhooum Aiyam Tharum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #846
உன்பால் குற்றத்தை ஒழிக்காத போது ஆடைகட்டுதல்
அறிவாமோ?

Tamil Transliteration
Atram Maraiththalo Pullarivu Thamvayin
Kutram Maraiyaa Vazhi.

மேலதிக விளக்கங்கள்
குறள் #847
மறைவான செய்தியைச் சொல்லிவிடும் அறிவிலி தனக்குத்
தானே கேடாவான்.

Tamil Transliteration
Arumarai Sorum Arivilaan Seyyum
Perumirai Thaane Thanakku.

மேலதிக விளக்கங்கள்
குறள் #848
சொன்னாலும் செய்யான் தன்னாலும் தெளியான் இவன்
சாகும் வரை பிறர்க்கு நோயாவான்.

Tamil Transliteration
Evavum Seykalaan Thaandheraan Avvuyir
Poom Alavumor Noi.

மேலதிக விளக்கங்கள்
குறள் #849
அறிவிலி தான் கண்டதையே கண்டவன் ; அவனை
அறிவுறுத்துபவன் அறியாதவன்.

Tamil Transliteration
Kaanaadhaan Kaattuvaan Thaankaanaan Kaanaadhaan
Kantaanaam Thaankanta Vaaru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #850
உலகம் கூறும் உண்மையை மறுப்பவன் காணும் பேபாகக்
கருதப் படுவான்.

Tamil Transliteration
Ulakaththaar Untenpadhu Illenpaan Vaiyaththu
Alakaiyaa Vaikkap Patum.

மேலதிக விளக்கங்கள்
🡱