சூது

குறட் பாக்கள் (Kuratpaakal)

குறள் : #931 #932 #933 #934 #935 #936 #937 #938 #939 #940
குறள் #931
வெற்றிதரினும் சூதினை விரும்பாதே; அவ்வெற்றி
தூண்டிற்கொக்கி மீனை விழுங்கினது போலும்.

Tamil Transliteration
Ventarka Vendritinum Soodhinai Vendradhooum
Thoontirpon Meenvizhungi Atru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #932
ஒன்று பெற்றுப் பல இழக்கும் சூதாடிக்கும் நலமாக வாழும்
முறை உண்டாகுமா?

Tamil Transliteration
Ondreydhi Noorizhakkum Soodharkkum Untaangol
Nandreydhi Vaazhvadhor Aaru.

மேலதிக விளக்கங்கள்
குறள் #933
காயை ஓயாது சொல்லி உருட்டினால் பொருள் வருவாய்
ஓடிப்போய் விடும்.

Tamil Transliteration
Urulaayam Ovaadhu Koorin Porulaayam
Pooip Purame Patum.

மேலதிக விளக்கங்கள்
குறள் #934
பல இழிவு தந்து பண்பைக் கெடுக்கும் சூதுபோல் வறுமை
தருவது வேறில்லை

Tamil Transliteration
Sirumai Palaseydhu Seerazhikkum Soodhin
Varumai Tharuvadhondru Il.

மேலதிக விளக்கங்கள்
குறள் #935
சூதாடுகாயும் கழகமும் கையும் விடாது அழுந்தியவர்
வறுமையாகி விடுவர்.

Tamil Transliteration
Kavarum Kazhakamum Kaiyum Tharukki
Ivariyaar Illaaki Yaar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #936
சூதென்னும் மூதேவிக்கு ஆட்பட்டவர் வயிறு நிறைய
உண்ணாது வருந்துவர்.

Tamil Transliteration
Akataaraar Allal Uzhapparsoo Thennum
Mukatiyaan Mootappat Taar.

மேலதிக விளக்கங்கள்
குறள் #937
சூதாடு கழகத்துக்கு நாளும் சென்றால் பழைய செல்வமும்
பண்பும் தொலையும்

Tamil Transliteration
Pazhakiya Selvamum Panpum Ketukkum
Kazhakaththuk Kaalai Pukin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #938
சூது பொருள் கெடுக்கும், பொய்யனாக்கும்; அருள் கெடுக்கும்,
துன்பத்தில் அழுத்தும்.

Tamil Transliteration
Porul Ketuththup Poimer Koleei Arulketuththu
Allal Uzhappikkum Soodhu.

மேலதிக விளக்கங்கள்
குறள் #939
உடையும் செல்வமும் உணவும் மதிப்பும் கல்வியும் எல்லாம்
சூதாடியை அடையா;

Tamil Transliteration
Utaiselvam Oonoli Kalviendru Aindhum
Ataiyaavaam Aayang Kolin.

மேலதிக விளக்கங்கள்
குறள் #940
தோற்கத் தோற்கச் சூதில் ஆசைவளரும்; துன்பம் படப்பட
வாழ்வில் பற்றுவளரும்.

Tamil Transliteration
Izhaththoru?um Kaadhalikkum Soodhepol Thunpam
Uzhaththoru?um Kaadhatru Uyir.

மேலதிக விளக்கங்கள்
🡱